தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதி இரவு ஒரு பெண்ணை நான்கு பேர் சேர்ந்து ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர். தொடர்ந்து, மறைவான இடத்திற்குச் சென்று, ஆட்டோவில் வைத்தே பெண்ணை நான்கு பேரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நேற்று (அக்.19) காலை போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம்சாட்டப்பட்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.