உடுமலையில் ஓட்டை உடைசல் அரசு பஸ் - பராமரிக்க வலியுறுத்தல்

565பார்த்தது
உடுமலையில் ஓட்டை உடைசல் அரசு பஸ் - பராமரிக்க வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து கணியூர் செல்லும் வழித்தடத்தில் 7ம் நம்பர் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த அரசு பேருந்தை தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பேருந்தின் இருக்கைகள், மேற்கூரை என பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்தப் பேருந்தில் பயணிக்கும் மக்கள கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த அரசு பேருந்தை முறையாக பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி