திருவள்ளூர் மாவட்டம் எர்ணாவூரில் எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க கருத்துக்கேட்பு கூட்டத்தில் உரையாற்றிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீமான் அனல் மின் நிலைய விரிவாக்கம் கூடாது என பேசிய போது திமுகவினர் “அனல் மின் நிலையம் எங்களுக்கு வேண்டும். சீமானே கிளம்பு.. சீமானே கிளம்பு' என திமுகவினர் தொடர்ந்து முழக்கமிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.