கண் பார்வையற்றவர்களின் வசதிக்காக ஏஐ தொழில்நுட்பம் மூலம் பிரத்யேகமாக கண் கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கண்ணாடியை அணிந்து கொண்டால், எதிரே வரும் வாகனங்களைப் பற்றி எச்சரித்து விபத்துகளில் இருந்து தப்பலாம். எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதற்கு இது வழிகாட்டுகிறது. நான்கு மாதங்களுக்கு முன்பே இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் தயார் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது.