திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்தி அணையிலிருந்து 46. 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசூர் ஷட்டில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது உப்பாறு அணையின் மூலம் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும் சுமார் 15, 000 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவோ பாசன வசதி வருகின்றது. அரசூர் ஷட்டரில் இருந்து வினாடிக்கு 695 கன அடி வீதம் 5 நாளைக்கு 300 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.