உடுமலை அருகே புத்தர் கோவில் கட்ட இடையூறு- அதிகாரிகள் ஆய்வு!

75பார்த்தது
உடுமலை அருகே
எலையமுத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட மலையடிவாரப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புத்தருக்கு கோவிலை எழுப்பி பூஜை செய்தும், அன்னதானம் வழங்கியும், போதனைகளை கற்பித்தும் வருகின்றனர். இதை சகித்துக் கொள்ளாத சிலர் புத்தருக்கு கட்டப்பட்டுள்ள கோவிலானது அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து உடுமலை ஆர். டி. ஓ விடம் மனு அளித்த நிலையில் விசாரணையும் நடைபெற்று வருகிறது. அதில் ஆஜரான புத்தர் கோவில் கட்டுமான நிர்வாகிகள் நிலத்திற்கு உண்டான ஆவணங்களை அளித்து கோவில் கட்டுவதற்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்று மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினரும் புத்த சீடருமான பிக்கு மௌரிய புத்தர் கோவில் கட்டும் பணியை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது
அவர் கூறியதாவது,
ஆணையத்தில் அளிக்கப்பட்ட மனு மீது நேரடியாக இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அரசுக்கு அளிக்க அறிக்கை அளிக்கப்பட உள்ளது என்றார். இந்த நிகழ்வின் போது உடுமலை தாசில்தார் ப. சுந்தரம், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகர், கிராம நிர்வாக அதிகாரி பால் வாசகம் உள்ளிட்ட அதிகாரிகள், அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் காளிமுத்து தமிழ் புலிகள் கட்சி
திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி மற்றும் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி