அடிக்கடி விபத்து! அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

73பார்த்தது
அடிக்கடி விபத்து! அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாராபுரம் பிரதான சாலையில்,
கழுகரை முதல் காரத்தொழுவுவரை அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டும் அதற்கான திட்டமிடல் போடப்பட்டும் இன்னும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறாமல் உள்ளது.
குறிப்பாக கணியூர் பேருந்து நிலையம் முதல் புதூர்மடம் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இப்பகுதியில் நடைபெறும் விபத்துக்களை குறைக்க சாலை விரிவாக்க பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி