கோயில் பிரச்சினை... வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை
காங்கேயம் காடையூரில் உள்ள பசுவன்மூப்பன்வலசு பகுதியில் ஒரு சமூக மக்களுக்குச் சொந்தமான ஸ்ரீ மீனாட்சி அம்மன் பிரசன்ன ஸ்ரீ கருங்குட கருப்பணசாமி மற்றும் ஸ்ரீ காணியாள சுவாமி கோயில்கள் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரின் தோட்டத்திற்குள் உள்ளது. அந்தக் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அவர்கள் இடையூறு செய்வதாகவும், கோவில் இடத்தை மீட்டுத் தரக் கோரி தாங்கள் வழிபாடு செய்ய வேண்டிய 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நேற்று(செப்.11) அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. மாலை 3 மணி முதல் இரவு வரை ஒரு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர். அப்போது, வட்டாச்சியர் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஓரிரு நாளில் தோட்டத்தின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்படும் என கூறப்பட்டதை தொடர்ந்து போராட்டம் இரவு 10 மணி முடித்து வைக்கப்பட்டது.