திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அமைந்துள்ள கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சன் அச்சகம் எதிரே சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. ஆகவே எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.