அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு நாளை (செப்., 14) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். கடந்த மாதம் 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் மொத்தமாக ரூ.7,516 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிலையில் நாளை காலை தமிழகம் திரும்புகிறார்.