காங்கேயம் அருகே உள்ள அகிலாண்டபுரம் அரசு ஆரம்பப்பள்ளி அருகே இரவு நேரத்தில் மருத்துவ கழிவுகளை வெளியூர் நபர்கள் வந்து கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே காங்கேயம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காங்கேயம் நகராட்சி துறை அதிகாரிகள் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.