சிவகங்கை: குன்றக்குடி முருகன் கோவிலில் 52 வயதுடைய யானை சுப்புலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ஓய்வெடுக்கும் கொட்டகையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கிய யானை தீக்காயம் அடைந்தது. அதற்கு கால்நடை மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் உயிரிழந்தது. குட்டியில் இருந்தே வளர்க்கப்பட்டு வந்த யானைக்கு குன்றக்குடி மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அங்கு வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.