விதவைப் பெண்ணுக்கு கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்காத காவல்துறை

72பார்த்தது
காங்கேயம் KGK நகரில் வசிப்பவர் மாலதி. 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவர் வினோத்குமார் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவர், மாமனார் ராமசாமி, மாமியார் கண்ணம்மாளுடன் வசித்து வந்தார்கள். கணவர் தனியார் வங்கியில் கடன் பெற்று ஆட்டோ ஓட்டி வந்தார். 2021 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்து விடவே ஒரு சில ஆண்டுகள் மட்டும் மாமனார், மாமியார், குழந்தையுடன் மாலதி வசித்துவந்தார். கணவரின் தம்பி சரண்ராஜ் கணவரின் குடும்பத்துடன் பேச்சு வார்த்தை இல்லாமல் வெளியூரில் இருந்ததாகவும் அண்ணன் இறந்து விடவே அப்பா அம்மாவுடன் இணைந்து கொண்டு மாலதி மற்றும் குழந்தையை கொடுமைப்படுத்தி தகாத வார்த்தைகள் கொண்டு பேசி குழந்தையுடன் வீட்டை விட்டு விரட்டியதாக தெரிவித்தார். கணவரின் ஆட்டோவை திரும்ப கேட்டு தகாத கெட்டவார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து  வீடியோ ஆதாரத்துடன் காங்கேயம் காவல் துறை, மகளிர் காவல்துறையில் புகார் தெரிவித்தும் கடந்த 3 நாட்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றார். மாமனார் ராமசாமியை நேரில் அழைத்து விசாரணை கூட செய்யவில்லை.  அனைத்து சொத்துக்களையும் கணவரின் தம்பி சரண்ராஜ் பெயரில் மாற்றி மாமனார் கொடுத்து விட்டதாகவும் குழந்தைக்கும் எனக்கும் பாதுகாப்பு வழங்கிடவும் இழந்த சொத்துக்களை பெற்றுத்தர தமிழக கோரிக்கை முன்வைக்கின்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி