உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ரஜினிகாந்த், தான் குணமடைய வாழ்த்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் என அனைவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்தார். அதே வேளையில் ரஜினி குணமடைய வேண்டி பதிவிட்ட நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய்க்கு தனியாக நன்றி ஏதும் தெரிவிக்கவில்லை. இதைக் கண்ட நெட்டிசன்கள் விஜய்யை அரசியல்வாதியாக ரஜினி ஏற்கவில்லை என கூறிவருகின்றனர்.