2000 ஆண்டுகள் பழமையான கோவிலில் திருப்பணி தீவிரம்

52பார்த்தது
2000 ஆண்டுகள் பழமையான கோவிலில் திருப்பணி தீவிரம்
காங்கேயம் அடுத்த அரசம்பாளைத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் 
கோவில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 13 வருடத்திற்கு முன்பு 2014ம் ஆண்டு கோவிலை புதுப்பிக்க பாலாலயம் நடத்தப்பட்டு தொடர்ந்து பலமுறை தடைபட்டதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இந்து சமய அறநிலைத்துறை  இணை ஆணையர் குமாரதுறை,  துணை ஆணையர் செந்தில்குமார்,  கண்காணிப்பாளர் சி. சு.  பால்ராஜ்,  காங்கேயம் ஆய்வாளர் செல்வப்ரியா,  உபயதாரர் சாந்தி ஆகியோர் முன்னிலையில் பாலாலயம் நடத்தப்பட்டது.  இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சிவன்மலை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினாம்பாள்  தலைமையில் பால் பட்டாலி வெண்ணீஸ்வரர் கோவிலில் பழங்கால கல்வெட்டுகள் சுவடுகள் ஆகியவை பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டு திருப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி