தமிழ்நாட்டில் இன்று 14 இடங்களில் சதமடித்த வெயில்

70பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று 14 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுள்ளென சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தின் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்-க்கு மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. அந்த விவரங்கள் பின்வருமாறு: ஈரோடு - 107.6, திருப்பத்தூர் - 106.52, தருமபுரி - 106.16, வேலூர் - 105.98, திருத்தணி - 105.08, கரூர் பரமத்தி - 104.36, சேலம் - 104.18, மதுரை விமான நிலையம் - 103.28, மதுரை நகரம் - 102.92, கோவை - 102.56, திருச்சி - 102.38, நாமக்கல் - 102.2, மீனம்பாக்கம் - 101.48, தஞ்சாவூர் - 100.4.

தொடர்புடைய செய்தி