குற்ற வழக்கு இருந்தால், பாஸ்போர்ட் பெற முடியாது!

51பார்த்தது
குற்ற வழக்கு இருந்தால், பாஸ்போர்ட் பெற முடியாது!
குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வன்கொடுமை தடைச் சட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தமிழரசன், தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல அனுமதித்தால் அது குற்ற வழக்கின் விசாரணையை பாதிக்கும் என்றும் பாஸ்போர்ட் சட்டத்தில், குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிராகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி