தீப்பற்றி எரியும் வாகனங்கள்.. முக்கிய அறிவுறுத்தல்

69பார்த்தது
தீப்பற்றி எரியும் வாகனங்கள்.. முக்கிய அறிவுறுத்தல்
சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீ பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்விபத்துக்கள் பற்றி ஆய்வு செய்கையில் மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள், மற்றும் அங்கீகரிக்கப்படாத (அ) தகுதியில்லாத நிறுவனங்களால் அது மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகனச் சட்டம் (ம) விதிகளின்படி குற்றமாகும் என போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி