சர்வதேச அளவிலான தடகள போட்டியில் தங்கம் வென்று காங்கேயம் மாணவன் சாதனை
காங்கேயம் அருகே நத்தக்காடையூர் சேர்ந்த கவின் கருப்பசாமி வரதப்பம்பாளையம் எஸ். வி. என். எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகின்றான். இந்த மாணவன் மாநில அளவிலான தடகளப் போட்டியில் 1500 மீட்டரில் முதல் பரிசு பெற்று தங்கம் வென்று சாதனை படைத்தான். பின்னர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்ச்சி பெற்றிருந்தார்.
24. 05. 2024 முதல் 26. 05. 2024 தேதி வரை ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தடகள போட்டியிலும் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்காக 3000 மீட்டரில் தங்கப்பதக்கமும் 800 மீட்டரில் வெள்ளி பதக்கம் வென்று சர்வதேச அளவிலான போட்டிக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். பின்னர் 01. 09. 2024 முதல் 04. 09. 2024 வரை நேபாலில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டியில் இந்தியா, நேபால், ஸ்ரீலங்கா, பூட்டான் ஆகிய நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவிற்காக கலந்துகொண்டு 3000 மீட்டர், 800 மீட்டர், 200 மீட்டர் ஆகிய மூன்று போட்டியிலும் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். தற்போது பதக்கங்கள் வென்ற மாணவனை சக மாணவர்கள் ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மற்றும் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.