இண்டர்நெட் கேபிள் அறுந்துவிழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

1081பார்த்தது
காங்கேயம் சென்னிமலை சாலையில் இண்டர்நெட் வசதிக்காக மின்கம்பங்கள் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு கேபிள் ஒயர்கள் கட்டப்பட்டுள்ளது.  இவ்வாறு‌ கட்டப்படும் ஒயர்கள் சில நேரங்களில் காற்றின்வேகத்தினாலோ அல்லது 
ஒயரின் எடைக் காரணமாகவும் அவ்வபோது அறுந்து 
விழுவதுண்டு.  மேலும் இவ்வாறு அறுந்து விழும்‌ பட்சத்தில் சில சமயங்களில் அவ்வழியாக செல்பவர்கள் பாதிப்படைக்கின்றனர்.  சென்னிமலை சாலையில் கட்டப்பட்டிருந்த அதிக கனமுள்ள ஒயர் 
அறுந்து சாலையின் குறுக்கே விழுந்தது.  இதனால் அப்பகுதியில் சென்ற சில வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்தும்,  சிலருக்கு கழுத்தை அறுத்து காயம் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.  மேலும் அந்த ஒயர்கள்‌ சாலையின் குறுக்கே அறுந்து தொங்கியதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள்,  காரில் செல்பவர்கள்,  பேருந்து,  லாரி மற்றும் பள்ளி வாகனங்கள் ஆகியவை செல்ல முடியாமல் பாதி வழியில் நின்றது.  இதனால் அப்பகுதியில் பெரும்‌ போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  மேலும் இது போன்று பொதுமக்கள் ஆபத்து விளைவிக்கும் வகையில் அமைக்கப்படும் இண்டர்நெட் ஒயர் இணைப்புகள்,  மின்கம்பிகள் ஆகியவை மிக கவனமாக கையாளப்பட‌ வேண்டும் எனவும்,  பொதுமக்கள் இடையூறாக அமையக்கூடாது எனவும்,  முறைப்படி அமைக்கப்பட வேண்டும் எனவும்,  இது போன்ற வேலைகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களுக்கு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி