தண்ணீர் பந்தல் அமைக்க தேமுதிக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்

26397பார்த்தது
தண்ணீர் பந்தல் அமைக்க தேமுதிக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்
கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் கால தாமதம் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில், வெயிலில் வாடும் மக்களுக்கு உதவி செய்யும் வகையில், தண்ணீர் பந்தல் அமைக்க தேமுதிக நிர்வாகிகளுக்கு பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் பேரில் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் தண்ணீர் பந்தல் அமைத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி