காங்கேயம் இருந்த காருக்கு டோல்கேட்டில் எடுக்கப்பட்ட  பணம்

587பார்த்தது
காங்கேயம் அரசு‌ மருத்துவமனை வளாகம் முன்புறம் காங்கேயம் வாடகை கார்‌ மற்றும் டெம்போ ஸ்டான்ட் செயல்பட்டு வருகிறது.  இங்கு சுமார் 100க்கும் மேற்பட்டோர் டிபோர்டு என கூறப்படும் வாடகை கார்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.  இங்கு கடந்த 25 ஆண்டுகளாக சொந்தமாக கார் வைத்து சுற்றுலா மற்றும் வாடகை  கார்‌ ஓட்டும் படியாண்டிபாளையத்தை சேர்ந்த மகேந்திரன் வயது 51.  இந்த நிலையில் நேற்று காலை சுமார் 7 மணி அளவில் வழக்கம் போல் கார் ஸ்டான்ட்க்கு தனது காரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு வாடகை சவாரிக்காக காத்துக் கொண்டிருந்துள்ளார்.  அப்போது சுமார் 11 மணி அளவில் அவரது தொலைபேசி எண்ணிற்கு ஒரு 
குறுஞ்செய்தி வந்துள்ளது.  அதை படித்த மகேந்திரன் 
அதிர்ச்சி அடைந்துள்ளார்.  
உடனே அருகில் இருந்த மற்ற கார் ஓட்டுநர்களிடம் தெரிவித்துள்ளார்.  இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த ஓட்டுநர் காங்கேயம் காவல் 
நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  காங்கேயம் கார் 
ஸ்டான்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு திருச்சி மாவட்டம் பொன்னம்பலம் பட்டி பிளாசா  சுங்கச்சாவடியை கடந்ததாக கூறி ரூ. 125 கட்டணமாக‌ வசூலித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி