திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா விரைவு தரிசன கட்டண உயர்வு செய்தியை கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது. கந்த சஷ்டி திருவிழா நடைபெறும் 02.11.2024 முதல் 09.11.2024 வரையிலான 8 தினங்களுக்கு மட்டும் விரைவு தரிசன கட்டண சீட்டாக நபர் ஒன்றுக்கு ரூ.1,000 நிர்ணயம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இணை ஆணையர் பெயரில் சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவியது. இதனை கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது.