சென்னையில் இன்று (செப்.27) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகளை தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பம்மல் பகுதி (சிக்னல் அலுவலக சாலை), வெங்கடேஸ்வரா நகர் (பகுதி), மூவர் நகர், அகத்தீஸ்வரர் கோயில் 1வது & 2வது தெரு, ஆண்டாள் நகர், கவுல் பஜார், இந்திரா நகர், சிவ சங்கர் நகர், ஈசிடிவி நகர், மல்லியம்மா நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரமானது துண்டிக்கப்படும்.