கச்சா எண்ணெய் இறக்குமதி, நடப்பு செப்டம்பரில் விலை சராசரியாக பேரலுக்கு 74 டாலராக குறைந்துள்ளது. இதனால், இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் விநியோக நிறுவனங்களின் மோட்டார் வாகன எரிபொருள் சில்லறை விற்பனையின் லாப வரம்பு வெகுவாக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை மாற்றமின்றி நிலையாக இருக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தர ஆய்வு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.