திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உடுமலை சாலையில் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. இங்கு ஆட்டுக்கறி கடை, கோழி கறி கடை போன்றவை அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோழி கறிக்கடைகள் உள்ள பகுதியில் சாக்கடை கால்வாய் நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது. இதிலிருந்து துர்நாற்றம் பெருமளவில் வீசுகின்றது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.