சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா, 62வது குருபூஜை விழா வருகிற 30ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பசும்பொன் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்கக் கவசம் போலீஸ் பாதுகாப்புடன் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு நேற்று (அக்., 25) எடுத்துச் சென்று, அணிவிக்கப்பட்டது. தேவர் சிலைக்கு கவசம் அணிவித்து, சிறப்பு பூஜையும் நடைபெற்றது.