தாராபுரத்தில் காங்கேயம் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு!

85பார்த்தது
தாராபுரத்தில் காங்கேயம் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வெற்றி லைஃப் கேர் பவுண்டேஷன் மது போதை நோய் மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் என்ற பெயரில் குடிபோதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்ட
காங்கேயம் களிமேடு பங்களா புதூர் ரோட்டில் வசித்து வரும் கட்டிட தொழிலாளி மணிகண்டன் என்ற
நபர் நேற்று முன்தினம் மாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


. இது குறித்து தாராபுரம் போலீசார் மற்றும் கோட்டாட்சியர் வட்டாட்சியர் ஆகியோர்
தாராபுரம் அண்ணா நகரில் திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நடத்தி வந்த மறுவாழ்வு மையத்தை இன்று இரவு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பிறகு விதிகள் மீறி செயல்பட்டதாக கூறி காப்பகத்திற்கு சீல் வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி