தாராபுரம் அருகே ஈ. தொல்லை பொதுமக்கள் அவதி!

79பார்த்தது
தாராபுரம் அருகே ஈ. தொல்லை பொதுமக்கள் அவதி!
தாராபுரம் அருகே எரகாம்பட்டி கிராமத்திற்குட்பட்ட சிங்காரிபாளையம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த ஆண்டு தனியார் முட்டைக் கோழிப்பண்ணை அமைக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பண்ணையிலிருந்து தினசரி லட்சக்கணக்கான ஈக்கள் படையெடுத்து பண்ணையைச் சுற்றியுள்ள வீடுகள், பண்ணையிலிருந்து சுமார் 1கிலோ தூரத்தில உள்ள சிங்காரிபாளையத்தில் உள்ள வீடுகளுக்கு வந்தவண்ணம் உள்ளது.
இந்த ஈக்கள் தொடர்ந்து சப்தத்துடன் பறந்து வீடுகளில் வைக்கப்பட்டுள்ள காய்கறிகள், பழங்கள் மீது அமர்கிறது. மேலும் சமையல் பாத்திரங்களில் விழுந்து விடுகிறது. வீடுகளில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஈக்கள் வியாபித்திருப்பதால் காலையில் டீ கூட நிம்மதியாக குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுளளது. டீ குடித்து முடிப்பதற்குள் டம்ளருக்குள் விழுந்து விடுகிறது. அத்துடன் வீடுகளில் துணிகள் உலர்த்தப்படும் கயிறுகளில் இடைவெளியின்றி ஈக்கள் அமர்வ்தால் அதன் எச்சம் துணிகளில் பட்டு கரை படிந்தது போல் மாறிவிடுகிறது.
காலை, மாலை வேளைகளில் சமையல் செய்வதற்குள் பாத்திரங்களில் ஈக்கள் விழுந்துவிடுகிறது. சமையல் செய்து முடித்தவுடன் பாத்திரங்கள் ஒன்றாக வைத்து துணிகளைக் கொண்டு மூடி வைத்து வருகிறோம். தொடர்ந்து படையெடுத்து வரும் ஈக்களால் கடுமையான சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி