திமுக அதிக வாக்குகளுடன் வெற்றி பெறவேண்டும் அமைச்சர் பேச்சு

73பார்த்தது
தாராபுரம் ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (ஆக.,31) நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, ஈரோடு எம்பி பிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.

அமைச்சர் சாமிநாதன் பேசுவையில் தமிழக அரசு பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழக அரசு அனைத்து பெண்களும் வாழ்விலும் முன்னேற்றம் அடைய மகளிர் அனைவருக்கும் இலவச பயணம் மேற்கொள்ள நகர பஸ்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏழை நடுத்தர குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கி வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். அதை முறியடிக்கும் வகையில் வருகின்ற தாராபுரம் சட்டமன்றத் தேர்தல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி