வெள்ளகோவிலில் புகையிலை பொருட்கள் விற்ற இரண்டு பேர் கைது

50பார்த்தது
வெள்ளகோவிலில் புகையிலை பொருட்கள் விற்ற இரண்டு பேர் கைது
வெள்ளகோவில் பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் மணிமுத்து தலைமையில் காவல்துறையினர் ஓலப்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பேக்கரியில் பிரிட்டோ ஜோசப் (வயது 40) என்பவர் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதை அடுத்து போலீஸார் அவரை கைது செய்து 15 புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதே போல் வள்ளியரச்சல் பகுதியில் முருகானந்தம் பெட்டிக்கடையில் 14 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி