திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள பெருமாநல்லூரில் கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதி கேசவ பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று(ஆக.30) இந்த கோயிலுக்கு வருகை புரிந்தார்.
உத்தம லிங்கேஸ்வரர் கோவிலில் முதலில் சாமி தரிசனம் செய்தவர் அதற்கு பின்பு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். திருக்கோவில் சார்பாக வரவேற்பும் மரியாதையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.