திருச்சிராப்பள்ளி - Tiruchirappalli

திருச்சி: கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் வடைமாலை

திருச்சி: கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் வடைமாலை

திருச்சி கல்லுக்குழியில் அமைந்துள்ள புகழ்மிக்க அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு வரும் மார்கழி 15 ஆம் தேதி (30.12.2024) திங்கட்கிழமை அன்று பக்தர்களின் நன்மைக்காகவும், உலக நன்மை கருதியும் ஆஞ்சநேய சுவாமிக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையினை தொடர்ந்து காலை 7:00 மணி முதல் 1,00,008 வடை மாலை சாற்றுதல் விழா நடைபெற உள்ளது.  விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் கல்யாணி, உதவிய ஆணையர் லட்சுமணன் ஆகியோரின் ஆலோசனையின்படி கோவில் செயல் அலுவலர் பொன்.மாரிமுத்து, தக்கார் சுந்தரி, அர்ச்சகர் வரதராஜன், மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.  மேலும் அனுமன் ஜெயந்தி விழாவில் அனைவரும் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருளை பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வீடியோஸ்


திருச்சிராப்பள்ளி