சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையில் சென்ற பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.