திருச்சிராப்பள்ளி - Tiruchirappalli

தெய்வத்தமிழ் பேரவையினர் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி தெய்வத்தமிழ் பேரவை, வள்ளலார் பணியாகம் சார்பில் திருச்சி காதி கிராப்ட் அருகில் தெய்வதமிழ் பேரவை மாவட்ட அமைப்பாளர் ராமராசு தலைமையில் கடலூர் மாவட்டம், வடலூர் பெருவெளியில் தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் பன்னாட்டு மையம் அமைப்பதை கண்டித்தும், மாற்று இடத்தில் அமைத்துக் கொள்ள கோரிக்கை வலியுறுத்தியும், அங்கிருந்து தமிழர் அறநிலைத்துறை முற்றிலுமாக வெளியேறவும் வலியுறுத்தி உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை(செப்.21) நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை வடகுரு மடாதிபதி ராஜயோக சித்தர் பீட குச்சனூர் கிழார் துவக்கி வைத்தார். உண்ணாவிரத போராட்டத்தில் கவித்துவன், இராசாரகுநாதன், சுப்ரமணியன், இலக்குவன், அழகர்சாமி, மூக்கன் சுப்பிரமணியன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

வீடியோஸ்