திருச்சிராப்பள்ளி - Tiruchirappalli

திருச்சி: ரயிலில் பாய்ந்து இளைஞர் தற்கொலை

திருச்சி: ரயிலில் பாய்ந்து இளைஞர் தற்கொலை

திருச்சி செம்பட்டு மொராய் சிட்டியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தின் ஒப்பந்த கேண்டினில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கோகுலகிருஷ்ணனின் மனைவி குழந்தையை அவரிடம் விட்டுவிட்டு சென்றுவிட்டார். குழந்தை மற்றும் தாயுடன் கோகுலகிருஷ்ணன் வசித்து வந்துள்ளார். கேண்டின் ஒப்பந்த காலம் முடிந்து வேலையும் பறிபோனது.  இதனால் விரக்தியில் இருந்த கோகுலகிருஷ்ணன் நேற்று (ஜனவரி 2) திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் உத்தமர் கோவில் அருகே சென்னை நோக்கி சென்ற வந்தேபாரத் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


திருச்சிராப்பள்ளி