துறையூர் அடிவாரம் பெருமாள் மலை கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டு விழா. திரளான பக்தர்கள் பங்கேற்பு. மாத நாட்காட்டி, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
துறையூர், துறையூரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மலை மீது அமைந்துள்ள பெருமாள் மலை ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி ஆலயத்தில் அதிகாலை புத்தாண்டை முன்னிட்டு பூஜைகள் நடைபெற்றன. திரளான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர். அனைத்து விதமான வாசனை திரவியங்களால் கொண்டு மூலவரான ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி மற்றும் பூமாதேவி ரமாதேவி ஆகியோர்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பஞ்சமுக தீபாரதனை காண்பிக்கப்பட்டது. வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஒரு முக தீபாரதனை துளசி ஆகியவை வழங்கப்பட்டன.
பெருமாள் மலையேறும் நண்பர்கள் புத்தாண்டிற்கு பெருமாள் மலைக் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி மூலவர் உருவம் உள்ள 12 மாத நாட்காட்டியை வழங்கினர். மேலும் புது வருடத்தை முன்னிட்டு இனிப்புகள், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை ஆகியவை அடங்கிய பை தொகுப்பையும் வழங்கினார்கள். மேலும் வந்திருந்த பக்தர்களுக்கு காலை அன்னதான உணவு வழங்கப்பட்டது.