தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் இன்று(ஜன.3) தொடங்கியுள்ளது. இந்த டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகித்து வருகின்றனர். அந்த டோக்கனில் பரிசு தொகுப்பை பெறும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதனை ஜன.9 முதல் பெற்றுக் கொள்ளலாம்.