சென்னை யானைகவுனி பகுதியில் காதலிக்க வற்புறுத்தி 19 வயது இளம்பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல் விடுத்த அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் (20) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தின் போது அர்ஜுனுடன் இருந்த ஜேம்ஸ் (20) என்பவரும் கைது. இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இன்று (ஜன.03) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.