அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரையில் தடையை மீறி பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள குஷ்பு, பேரணிக்கு அனுமதி தருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை, பேரணிக்கு அனுமதி தர மாட்டார்கள் என்பது தெரியும் என கூறியுள்ளார்.