இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 40 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணி சார்பில் போலண்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும் ஜடேஜா, 26, பும்ரா 20, வாஷிங்டன் சுந்தர் 14 ரன்கள் எடுத்தனர். இந்த போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.