திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா இன்று (ஜனவரி 11) கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் மாநகராட்சி மேயர் அன்பழகன், பாராளுமன்ற உறுப்பினர்கள் துரை வைகோ, அருண்நேரு, மாநகராட்சி ஆணையர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதரிணி, மகளிர் திட்ட இயக்குநர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் கொண்டாடி, அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை பார்வையிட்டனர். மேலும் இவ்விழாவில் அரசுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.