பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் நேற்று (ஜன. 10) வெளியானது. இப்படத்திற்கு தெலுங்கில் அதிக நேர்மறையான விமர்சனமும், தமிழில் கலவையான விமர்சனமும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 186 கோடி வசூலை அள்ளியுள்ளது.