நடிகை கமலா காமேஷ் காலமானார்

63பார்த்தது
நடிகை கமலா காமேஷ் காலமானார்
பிரபல திரைப்பட நடிகை கமலா காமேஷ் தனது 72வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். சம்சாரம் அது மின்சாரம், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, குடும்பம் ஒரு கதம்பம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். கடந்த 1974ல் இசையமைப்பாளர் காமேஷை அவர் மணந்தார். இந்த தம்பதியின் மகள் உமா ரியாஸ் பிரபல நடிகையாக உள்ளார். கமலா காமேஷ் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி