அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பை நிபந்தனையின்றி விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு டொனால்ட் ட்ரம்ப் பணம் கொடுத்தது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கான தண்டனை வழங்குவதை தாமதப்படுத்த டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆனால், அதை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் நியூயார்க், மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.