அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வழக்கில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. காவல் ஆணையர் மீது நடவடிக்கை என்ற உத்தரவுக்கு எதிராக மட்டுமே தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.