திருவாரூர்: மன்னார்குடியில் கல்லூரி மாணவி ஒருவர் நேற்றிரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது விஜய் என்பவர் நண்பர்களுடன் அப்பகுதியில் மது அருந்தி நின்றுள்ளார். மாணவி அந்த வழியாக சென்ற போது விஜய் அவரின் துப்பட்டாவை இழுத்துள்ளார். இதுபற்றி மாணவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். மாணவியின் தந்தை கோவிந்தராஜ், சகோதரர் பாரதி இருவரும் விஜய்யை தாக்கியுள்ளனர். அப்போது விஜய் தான் வைத்திருந்த கத்தியால் தந்தை, மகனை சரமாரியாக குத்தியுள்ளார். தொடர்ந்து அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.