அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் அளித்தவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை எனவும் சம்பவம் நடந்து 12 நாட்களுக்கு பின்னரே பதிவு செய்யப்பட்டதாகவும் கூறி எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-க்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜன. 10) சட்டப்பேரவையில் சவால் விடுத்தார். இந்நிலையில் இன்று (ஜன. 11) பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சபாநாயகரிடம் முதல்வர் வழங்கியதாக தெரிகிறது.