பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை சகோதரிகள் தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் பஞ்சாப் மாநிலம் குஜ்ரன்வாலாவில் ஜனவரி 1ஆம் தேதி நடந்தது. தந்தை தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதிலிருந்து நிரந்தரமாக விடுபட தந்தையை கொன்றதாகவும் சகோதரிகள் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மூத்த மகளை தந்தை ஒரு வருடமாக பலாத்காரம் செய்து வந்ததாகவும், இளைய மகளை 2 முறை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.