திமுக 7ஆவது முறையாக ஆட்சியமைக்கும் - முதலமைச்சர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் திமுக 7ஆவது முறையாக ஆட்சியமைக்கும் என தெரிவித்தார். மேலும் அவர், பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்பட்டார். தமிழகம் வளர்ந்து வருவதை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. எனவே திட்டமிட்டு ஆளுநர் விதிமீறலில் ஈடுபடுகிறார் என்றார்.